நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யயும். நமக்கும் நேபாளத்திற்கும் நெருக்கமான கலாசாரதொடர்பு உள்ளது. நமக்கு நெருங்கிய நட்பு நாடும்கூட. நேபாளத்தில் நில நடுக்கம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தருணத்தில் நேபாள மக்களோடு இந்தியா துணை நிற்கும். இயற்கைசீற்றம் ஏற்பட்டவுடன், பிரதமர் மோடி உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இவர் சொல்லித்தான் எனக்கு நில நடுக்கம் தெரியவந்தது. இந்தியாவில் இது வரை 72 பேர் பலியாகியுள்ளனர். 300 பேர் காயமுற்றுள்ளனர். பாதித்த பகுதிகளில் மீட்புபணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நேபாளத்திற்கு தேசியமீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். இந்தமக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருந்துவருகிறது. என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லோக் சபாவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply