நேபாளத்தில் உள்ள தமிழர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடியின் நேரடி நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக செயல் பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேபாளத்தில்

பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை தாயகம் அழைத்துவரும் பணியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்தச் சூழலில் நேபாளத்தில் இருக்கும் தமிழர்கள் பாதுகாப்புக் குறித்து தமிழக்தில் உள்ள அவர்கழது உறவினர்கள் துயரமடையவோ, அச்சப் படவோ தேவையில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். .

Leave a Reply