நேபாளம் மிக பயங்கர நிலநடுக்கத்தால் சிக்கி, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நிலநடுக்கம் குறித்து ஊகங்களை செய்தி யாக்கி மக்களை பீதியடை செய்யவேண்டாம் என்று மத்திய அரசு ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டில் மீட்புப்பணிகளை மத்திய அரசு முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறது.

அங்குள்ள இந்தியர்களை மீட்கும்பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ள மத்திய அரசு, நிலநடுக்கம் தொடர்பாக ஊகங்கள் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டு மக்கள்மத்தியல் பீதியைக் கிளப்ப வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.

Tags:

Leave a Reply