அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக பவானி சிங்கை நியமனம்செய்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திமுகவைச் சேர்ந்த அன்பழகன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரஃபுல்லா சி.பண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு, அளித்துள்ள தீர்ப்பில், மேல் முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானிசிங்கை நியமிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நடந்தவழக்கு விசாரணையை மறு விசாரணை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply