நேபாளத்தில் கடந்த சனிக் கிழமை ஏற்பட்ட மிகமோசமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,700 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து நேபாளத்துக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ஒருமாத ஊதியத்தை பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்தியா, நேபாளத்தில், நில நடுக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரண பணிகளுக்கு அளித்துவரும் ஒத்துழைப்புக்கு மாநில அரசுகள், தேசிய பேரிடர் மீட்புப்படை, ஊடகம், பிற அமைப்புகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

அனைவரும், "பிரதமருக்கு நன்றி' என தெரிவிக்கின்றனர். உண்மையில் இந்த நன்றி யானது, நமது நாட்டு கலாசாரத்துக்கு உரியது'

யாருக்காகவாவது நன்றிதெரிவிக்க விரும்பினால், அதை 125 கோடி இந்திய மக்களுக்குதான் தெரிவிக்கவேண்டும். துணிச்சலான இதுபோன்ற சூழ்நிலையில், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளித்துவரும் மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இந்த சூழ்நிலையில், மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தான், மத்திய அரசுக்கு மிகப் பெரிய சொத்தாகும்.

இதேபோன்று, நிலநடுக்க மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர், தேசியபேரிடர் மீட்புப்படையினர், மருத்துவக் குழுவினர், நிலநடுக்கம் தொடர்பான செய்திகளை சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து துணிச்சலுடன் ஒளிபரப்பிய ஊடகத்தினர் ஆகியோருக்கு நன்றி என்று மோடி தெரிவித்துள்ளார்

Leave a Reply