உலகளவிலான பொருளாதார மந்த நிலையால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்க பட்டுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதனால், கடந்த நிதியாண்டின் ஏற்றுமதி இலக்கான 34 ஆயிரம்கோடி டாலரை எட்டமுடியாமல் போனதாக விஜய வாடா நகரில் அவர் கூறினார். வருமான வரித்தாக்கல் படிவங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பான பிரச்னையில் 14 பக்கபடிவத்தை மறு ஆய்வு செய்ய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஒப்புக் கொண்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதிய படிவத்தில் உள்ள வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள், வெளிநாட்டுபயணம் மற்றும் உள்நாட்டு வங்கிக் கணக்குகள் விவரங்களை தெரிவிக்கும் புதியமாற்றங்கள் குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply