ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் மோடி அண்மையில் ஆற்றிய உரையின் போது, "இந்தியாவின் 60 ஆண்டுகால கறையைத் துடைப்போம்' என பேசியதைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

எதிர்க் கட்சிகளின் புகாருக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "வெளிநாடுகளில் பிரதமரின் பேச்சுரிமைக்குத் தடையேதும் இல்லை'

ஊழலால் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட வில்லை; ஆனால், அதைச் சுட்டிக்காட்டி வெளிநாடுகளில் பேசுவதால்தான் நாட்டுக்கு தலைகுனிவு ஏற்படுகிறது' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறுகிறது. இந்த புதிய கொள்கையை பார்த்து ஆச்சரிய மடைகிறேன். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், ஊழலைப்பற்றி இந்தியாவில் பேசினாலும், அல்லது பெர்லினில் பேசினாலும், அதை இணைய தளங்கள் உலகெங்கும் கொண்டு சேர்த்துவிடும்.

ஆக, நாம் இங்கே விவாதிப்பதையும் கூட, உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்கமுடியும் என்பதை அனைவரும் உணரவேண்டும். எனவே, குறிப்பிட்ட ஒரு விவகாரத்தை வெளிநாட்டில் பேசியது தவறு எனக்கூற முடியாது. வெளிநாடுகளில் பிரதமரின் பேச்சுரிமைக்கு தடையேதும் இல்லை .

கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்றார் ஜேட்லி. பின்னர், பேசிய நாடாளுமன்ற விவகார துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும், "காங்கிரஸ் ஊழல்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது' என்றார்.

Leave a Reply