நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த் செய்தியை அந்நாட்டு பிரதமர் சுஷில்கொய்ராலா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பதிவு மூலமே தெரிந்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தை கடந்த சனிக் கிழமை புரட்டிபோட்டி நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.9 என்ற அளவுக்கு பதிவானது. நில நடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய் ராலா தாய்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தார்.

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு மருத்துவ சிகிச்சைக்காக பாங்காங் சென்று கொண்டிருந்தார். பாங்காக் விமானநிலையத்தில் கொய்ராலா தரையிறங்கியவுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேபாள நில நடுக்கம் குறித்து பதிவு செய்திருந்த டுவிட்டர் தகவலை பார்த்துதான் நிலநடுக்கம் ஏற்பட்டதை அவர் அறிந்துள்ளார்.

இதைதொடர்ந்து உடனடியாக அதிகாரிகளிடம் நில நடுக்கம் பற்றிய விரிவான தகவல்களை கேட்டறிந்துள்ளார். இந்த தகவலை நேபாள வெளியுறவுதுறை அமைச்சர் மகேந்திர பாக்தூர் பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாசெய்யும் உதவிகளுக்கு பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு செய்யும் உதவியை நாங்கள் போற்றுகிறோம். இந்தியபிரதமருக்கு நன்றி தெரிவிக்க எங்களுக்கு வார்த்தையே இல்லை என்றார்.

Leave a Reply