பிரதமர் நரேந்திரமோடி, ஒருமுறை அணிந்த கோட்டை, நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த குஜராத் வைரவியாபாரி, அதற்கு சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியாவுக்கு வந்தபோது, பிரதமர் மோடி விலையுயர்ந்த கோட் அணிந்திருந்தார். என்று , பெரும் சர்ச்சை கிழம்பியது.. இதனை தொடர்ந்து , கடந்த பிப்ரவரி மாதம் ஏலம்விடப்பட்டது.

ஏலத்தில், குஜராத்தைசேர்ந்த, வைரவியாபாரி லால்ஜி படேல், 4.31 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.பிரதமர் மோடி மீது மிகுந்தமரியாதை கொண்டுள்ள, லால்ஜி, மோடி ஒரு முறை அணிந்த கோட்டை, அகமதாபாத்தில் உள்ள, தன் அலுவலகத்தில் காட்சிப்பொருளாக வைக்க விரும்பினார்.

இதற்காக, 30 கிலோ எடையில், 5.9 அடி உயரமுள்ள பைபர் இழையில், மோடிக்கு சிலைதயாரித்து வருகிறார். ஏறக்குறைய, 80 சதவீத சிலை தயாரிப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும், விரைவில், கோட் அணிந்தமோடி சிலை, தன் அலுவலகத்தில் வைக்கப்படும் என்றும் லால்ஜி கூறியுள்ளார்.

Leave a Reply