அதிமுக., தலைமையிலான தமிழக அரசு முடங்கியுள்ளது; யார் முதல்வர் என்றே தெரிந்துகொள்ள முடியவில்லை,'' என, தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், 2016ல், பா.ஜ.க, ஆட்சி அமைக்கும். மக்களோடு இணைந்து மத்திய அரசு பணியாற்ற உள்ளது. வரும் 16ல், தமிழகத்தில், 32 மாவட்டங்களிலும், 29 மத்திய அமைச்சர்கள், மூன்று மாநிலமுதல்வர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, தீர்வுகாண உள்ளனர்.

'2ஜி' ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஊழல் முறை கேடுகளில் சிக்கியுள்ள காங்கிரஸ், ஊழலை சுட்டிக்காட்டும் பேரணியை நடத்தியிருப்பதை ஏற்கமுடியாது. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா, ரியல் எஸ்டேட் மசோதா, சாலைபாதுகாப்பு மசோதா ஆகியவை, மக்களுக்கு நன்மை தரக்கூடியவை. விரைவில் நீர் வழி பாதுகாப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட உள்ளது.

அ.தி.மு.க., தலைமையிலான தமிழக அரசு முடங்கியுள்ளது. யார்முதல்வர் என்றே தெரிந்துகொள்ள முடியவில்லை.தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் விரைவு படுத்தப்படும். தமிழகத்தில் பாஜக., ஆட்சி அமைந்தால், பூரணமதுவிலக்கு கொண்டுவரப்படும். பா.ஜ.,வில் இது வரை, 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். பா.ஜ.,வுடன் எந்தகட்சி சேர்ந்திருக்கும் அல்லது விலகியிருக்கும் என, தேர்தல் நேரத்தில் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.இலவச பொருட்கள் வழங்காமல், மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவே, பா.ஜ.க, முனைப்புகாட்டி வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply