நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தபிறகு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை காணப்படுகிறது. சிவப்புநாடா என்று சொல்லப்படும் அதிகாரிகள் நிர்வாககெடுபிடிகள் அகற்றப்பட்டுள்ளன என்று பாராட்டி இருக்கிறார் ஜம்முகாஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சையது. குஜராத் மாநிலத்தில் சுற்றுலா மேம்பாடு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி அரசின்செயல்பாடுகள் பற்றி குறிப்பிடும்போது அவர் கூறியதாவது:

குஜராத்தை ஒரு உதாரணமாக மாற்றிக் காட்டியவர் மோடி. பஞ்சாயத்து நடை முறைகளை அறிந்து கொள்வதற்காக அதிகாரிகளை குஜராத்துக்கு அனுப்பி இருக்கிறேன். நிர்வாக நடை முறைகள் வெளிப்படையாகவும் ஊழலுக்கு வழிசெய்யாமலும் நிர்வாக நடைமுறை கெடுபிடி இல்லாமலும் இருந்தால் அந்த அமைப்பு சிறப்பாக செயல்படும்.

எனினும் நரேந்திர மோடியின் மேம்பாட்டு திட்ட முழக்கங்களை நிறை வேற்றுவது நீண்ட கால பந்தயமாகவே இருக்கும்.

இந்தியா மிகப் பெரிய நாடு. பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் மிகப் பெரிய பலம். குஜராத் முதல்வராக மக்கள் அவரை பல முறை தேர்வு செய்துள்ளனர். ஜம்முகாஷ்மீரில் அமைந்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணி வடதுருவமும் தென்துருவமும் சந்திப்பது போன்றதாகும் என்றார் முப்தி.

முப்தி முகம்மதுவுடன் மாநில நிதி அமைச்சர் ஹசீப்திரபு, கல்வித் துறை இணை அமைச்சர் பிரியா சேத்தி, மூத்த அதிகாரிகள் வந்துள்ளனர்.

Leave a Reply