நிலம் கையப்படுத்தும் அவசரசட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை ஒருபோதும் அபகரிக்க மாட்டோம் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா மாநிலம் மாநிலமாக சென்று கட்சியை வலுசேர்த்து வருகிறார்..
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பா.ஜ. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இதில் தேசியதலைவர் அமித்ஷா கலந்துகொண்டு கட்சியை வலுசேர்க்கும் விதமாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது, ஏழைவிவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம், அவர்களுக்கு எளிதான கடனுதவி வழங்கிடும் முத்ராவங்கி திட்டம், போன்ற திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் விவசாயம் சார்ந்த திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது.

இதனை எதிர்க்கட்சிகள் , பெரு நிறுவனங்களுக்கு சாதமாக செயலபடுவுதாக பொய்பிரசாரம் செய்து வருகின்றன.நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை மத்திய அரசு ஒருபோதும் அபகரிக்காது, மேலும் குறைந்த விலைக்கு நிலங்கள் வாங்கப்பட மாட்டாது. அவரசசட்டம் குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றார்.

Leave a Reply