சீன சமூக வலைத் தளமான விஃப்போ என்ற சமுக இணைய தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்தார். அடுத்தவாரம் பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்லவுள்ள நிலையில் சீன மக்களுடன் நட்புறவை வளர்த்து கொள்ளும் வகையில், அந்நாட்டு சமூக வலைத் தளத்தில் அவர் இணைந்துள்ளார்.
விஃப்போ சமூக வலைத் தளத்தில் கணக்கு தொடங்கியிருக்கும் முதல் இந்தியத்தலைவர் மோடி என்பது குறிப்பிடத் தக்கது. அந்த வலைத்தளத்தில் அவர் பதிந்துள்ள முதல் நிலைத் தகவலில் 'ஹலோ சீனா. சீன நண்பர்களுடன் உரையாட எதிர்பார்த்து காத்திருக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.