அரசியல் மன மாற்றத்திற்கு வித்திட்ட பேலூர் ராமகிருஷ்ணா மடத்தின் தலைமை துறவியான சுவாமி அத்மஸ் தானந்தாவை, பிரதமர் மோடி நேரில் சந்திக்கவுள்ளார்.

இளம்வயதில், விவேகானந்தர் மீது கொண்ட பற்றின் காரணமாக 1966ம் ஆண்டு ராஜ் கோட்டில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் சிறிதுகாலம் மோடி தங்கியிருந்தார். அப்போது, புத்த துறவியாக மாறவேண்டும் என விரும்பிய மோடி, அதனை சுவாமி அத்மஸ் தானந்தாவிடம் தெரிவித்தார். எனினும், ஆன்மிகசேவையில் ஈடுபடுவதைவிட, மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என மோடிக்கு சுவாமி அத்மஸ்தானந்தா அறிவுறுத்தினார். இதன் பின்னர், ஆர்எஸ்எஸ். இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்ட மோடி, பின்னர் அரசியலிலும் காலடிபதித்தார்.

பிரதமர் பதவிக்கு மோடி வருவதற்கு முக்கிய தூண்டு கோலாக சுவாமி அத்மஸ்தானந்தா இருந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. குஜராத் முதலமைச்சராக பதவி வகித்தபோது, கடந்த 2013ம் ஆண்டு பேலூரில் உள்ள ராம கிருஷ்ணா மடத்திற்கு சென்று சுவாமி அத்மஸ் தானந்தாவை சந்தித்த மோடி, மீண்டும் அந்த மடத்திற்கு வருவதாக அப்போது கூறியிருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக விரைவில் தமிழகம் வரவிருக்கும் மோடி , பேலூர் மடத்திற்கு செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply