வங்க தேசத்துடன் எல்லைப்பகுதிகளை பரிமாறிகொள்ளும் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. எல்லைப்பகுதிகளை இரு நாடுகள் இடையே மாற்றம் செய்வதற்காக கடந்த 41ஆண்டுகளாக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.

கடந்த 1947ம்ஆண்டு இந்தியா-வங்கதேசம் நில எல்லை உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்த உடன்படிக் கையை மேற்கொள்வதற்கான அரசியலமைப்பின் 119வது திருத்த மசோதா பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்தது. இந்த மசோதா மாநிலங்களவையின் 181 உறுப்பினர்களின் ஆதரவுடன் நேற்று நிறைவேறியது.

இந்த மசோதா மக்களவையில் இன்று கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில் இந்த மசோதா நிறைவேறிய தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது.41ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட உடன்படிக் கையை நாம் செயல்படுத்த இருக்கிறோம். இந்த மசோதாவிற்கு அனைவரும் ஆதரவினை அளித்திருக்கிறார்கள். எல்லை பகுதிகளில் உள்ள இடங்களை இருநாடுகள் இடையே பரிமாறிகொள்வது தொடர்பாக அசாம் பகுதியையும் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டது.அந்த கோரிக் கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றார்.

இந்த மசோதா நிறைவேறியதன் மூலம் இருநாடுகளும் பலன் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

எல்லை பகுதி இடங்களை பரிமாறிகொள்வது தொடர்பான மசோதாவில் அசாம்,மேற்கு வங்காளம்,திரிபுரா, மேகாலயா, ஆகிய மாநில எல்லைப்பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply