சாதி, மத ரீதியான பாகுபாட்டை ஏற்றுக் கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியாது என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் டைம் இதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது, "சமீப காலமாக பாஜக.,வைச் சேர்ந்த சில தலைவர்கள் சிறு பான்மையினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துதெரிவித்து வருவதால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அச்சமடைந்துள்ளதாக கூறுப்படுவது குறித்து தங்கள் கருத்து என்ன" என்று கேட்கப்பட்டது. இதற்கு மோடி கூறியதாவது:

சாதி, மத ரீதியான பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ எனது அரசு அனுமதிக்காது. எனவே, சிறுபான்மையினரின் உரிமை மீதான கற்பனையான அச்சத்துக்கு இடமே இல்லை.

எந்த ஒருகுறிப்பிட்ட சிறுபான்மை மதத்தினருக்கும் எதிராக, எந்த ஒரு தனிநபராவது கருத்து தெரிவித்தால் அவர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது வரையில் பாஜக மற்றும் எனது தலைமையிலான அரசை பொருத்தவரை ஒரே ஒருபுனித நூல்தான் உள்ளது. அதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

ஓராண்டிலேயே அரசு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது, பல நாடுகள் இந்தியாவுடன் தொழில் மற்றும் வர்த்தக உறவை பலப்படுத்த ஆர்வத்துடன் உள்ளது.

இந்திய சீனா இடையிலான பிரச்னைகளுக்கு பரஸ்பரம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாணப்படும் , இதற்கு மூன்றாவது நாட்டின் உதவி தேவையில்லை

30 ஆண்டுகளுக்கு மேல் இந்திய, சீன எல்லையில் அமைதி நிலவுகிறது , 25 ஆண்டுகளுக்கு மேல் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம்கூட நடைபெறவில்லை இந்தியாவும், அமெரிக்காவும் இயல்பான நட்புநாடுகள் அமெரிக்கா, இந்தியாவிற்கு என்ன செய்யமுடியும் என்பதை பார்க்காமல், இரு நாடுகளும் சேர்ந்து உலகிற்காக என்ன செய்யமுடியும் என்பதை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply