கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் ராஷ்டிரீய ஜனதாதளத்தில் இருந்து பப்பு யாதவ் எம்.பி. நீக்கப்பட்டு உள்ளார்.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதாதளம் சார்பில் 5 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், கடந்த தேர்தலில் பீகாரின் மாதேபுரா தொகுதியில் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் சரத் யாதவை தோற்கடித்து இருந்தார்.

இந்த நிலையில் ராஷ்டிரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஜனதா பரிவாரை உருவாக்கி உள்ளன. இதற்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்த பப்பு யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியை லாலு பிரசாத்தின் மகனிடம் ஒப்படைக்கும் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இவ்வாறு கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அவருக்கு, விளக்கம்கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பப்புயாதவ் அனுப்பிய கடிதத்தை, கட்சியின் உயர்மட்ட குழு ஆய்வு செய்தது. ஆனால் அவரது பதிலில் திருப்தி அடையாத கட்சி தலைமை, பப்புயாதவை கட்சியில் இருந்து நீக்கி விட்டது.

ராஷ்டிரீய ஜனதாதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள பப்பு யாதவ், பா.ஜ.க.,வில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது தொகுதியான மாதே புராவில் அடுத்த வாரம் மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply