சத்தீஸ்கரில், தன்டேவாடா பகுதியில், பிரதமர் நரேந்திரமோடி நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார். . அப்போது ராய்ப்பூரில் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ராய்ப்பூரில் உள்ள காவல் துறை தலைமை அலுவலக கட்டிடத்தையும் அவர் திறந்துவைப்பதாக இருந்தது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை, பலத்தகாற்று வீசியதால் சரிந்து விழுந்தது.

இதில் பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல் துறறையினர் உட்பட சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவ மனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

மேடை சரிந்ததை அடுத்து, பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது

Leave a Reply