உற்பத்தி அதிகரிப்பு, தாதுவளங்களை அதிகரித்தல் மற்றும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக பணியாற்றி நாட்டில் வறுமைக்கு எதிராக போராடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தின் பர்ன்பூர் நகரில் நவீனமய மாக்கப்பட்ட ஐ.ஐ.எஸ்.சி.ஓ. ஸ்டீல் ஆலை தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது இதனை குறிப்பிட்ட மோடி, நம்மிடம் இரும்பு தாதுக்கள் உள்ளன. அவற்றை நாம் ஏற்றுமதிசெய்து சீனாவிடம் இருந்து ஸ்டீல் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதனால் இரும்பு தாதுக்களை நாம் வைத்திருப்பதன் பயன் என்ன? என அவர் கேள்வி எழுப்புபியுள்ளார். அவர் கூறும்போது, இந்த விவகாரங்கள் சரியாக எடுத்துரைக்கப்பட்டால், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். நாட்டில் வறுமைக்கு எதிராக போராடுவதற்கு உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.

அவரது அரசு ஆட்சிக்கு வந்தபின்பு பொருளாதார வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஒரு வருடத்திற்கு முன்பு கூட இந்தியா மூழ்கி விட்டது. அதிலிருந்து அது மீளாது என உலக நாடுகள் தெரிவித்திருந்தன. ஆனால் இன்று, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், உலகில் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என கூறியுள்ளன என மோடி கூறியுள்ளார்.

Leave a Reply