ராமகிருஷ்ண மடத்துடன் தனக்கு உள்ள ஆழ்ந்த ஈர்ப்பை வெளிப் படுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களிடம் நான் உங்கள் வீட்டு பிள்ளை என்றும் கூறியுள்ளார்.

கொல்கத்தா மருத்துவமனை ஒன்றில் மடத்தின் தலைவர் சுவாமி ஆத்மஸ் தானந்தாவை சந்தித்த மோடிக்கு பூங்கொத்துகொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு மோடி, துறவிகளில் தானும் ஒருவர் என்றும் எனவே, பெரியவரவேற்பு அளிக்கப்பட வேண்டாம் என்றும் கூறினார்.

தனது இல்லத்திற்கு வரும் சிறுவனை நீங்கள் வரவேற்பீர்களா? என அங்கிருந்த மடத்து அதிகாரிகளிடம் கூறியதை மடத்தின் உதவி செயலர் சுவாமி சுபீரானந்தா மேற்கோள்காட்டி கூறியுள்ளார். சுவாமி ஆத்மஸ்தானந்தாவை தனது குருஜி என அங்கிருந்த துறவிகள் மற்றும் மருத்துவ மனையின் அதிகாரிகளிடம் கூறிய மோடி, நீங்கள் அனைவரும் எனது குருஜிக்கு சேவைசெய்கிறீர்கள். அவரை கவனித்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பின் மோடி புத்துணர்ச்சி பெற்று புதுப் பொலிவுடன் உள்ளார் என சுவாமி சுபீரானந்தா கூறியுள்ளார். மோடி மடத்தின் அதிகாரிகளுடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்கிறார். அவர் மகிழ்ச்சியுடன் ஸ்ரீராமகிருஷ்ணா மற்றும் சுவாமி விவேகானந்தாவின் கொள்கைகளை பின் பற்றுகிறார் என்றும் சுபீரானந்தா கூறியுள்ளார்

Leave a Reply