ஊழலுக்கு எதிரான அரசியல்கட்சிகளை விரைவில் ஒன்றிணைப்போம்'', என்று சென்னையில் நடந்த போராட்டத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

ஆவின்பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரியும், ஆவின் நிறுவனத்தை கண்டித்தும் பாஜக. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-

கடந்த ஒருவருட பாஜக. ஆட்சியில் பொருளாதார ரீதியில் இந்தியா முன்னேறி வருகிறது. ஆனால் தமிழகம் பின்னோக்கி சென்று வருகிறது. ஆவின் நிறுவனத்தில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. தினமும் 23 லட்சம் லிட்டர் பாலிலும் ஊழல்நடக்கிறது. 'தட்டிகள்' வைத்து அரசாங்க அதிகாரிகளை தட்டிக்கேட்கும் அளவுக்கு பொதுப்பணித் துறை ஒப்பந்தகாரர்கள் வந்துவிட்டனர். அதிமுக. அரசில் நடந்து வரும் ஒவ்வொரு ஊழலும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.

தமிழக அரசின் நடவடிக்கைகளில் நிகழும் ஒவ்வொரு தோல்விக்கும், ஒவ்வொரு தவறான செயல் பாட்டிற்கும் எதிராக பாஜக. போராட்டத்தில் ஈடுபடும். அதிமுக., தி.மு.க.வுக்கு எதிராக ஒரு மாற்று சக்தியாக பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது. ஊழல் ஒழிப்பு ஒன்றே எங்களின் லட்சியம். எனவே தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான அரசியல்கட்சிகளை விரைவில் ஒன்றிணைப்போம். போராட்டம் நடத்துவோம்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எச்.ராஜா கூறுகையில், ''விலையில்லா கால்நடைகளை கொடுத்து விட்டு, பால் வியாபாரத்தையும் ஊக்குவித்து இப்போது 15 சதவீத பாலைவாங்க மறுக்கும் அரசின் செயல்பாடு நியாயமற்றது. உற்பத்தி செய்த பாலை அடுத்த 4 மணி நேரத்தில் காய்ச்சி பதனிடவேண்டும். அப்படி இல்லை என்றால், பால் கெட்டுவிடும். எனவே தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்'', என்றார்.

Leave a Reply