பிரதம மந்திரி காப்பீட்டு திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதா மோகன்சிங் சென்னையில் நேற்று கூறினார்.

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமாயோஜ்னா, பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜ்னா, அடல் ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றின் தொடக்க நிகழ்ச்சி சென்னை எத்தி ராஜ் மகளிர் கல்லூரியில் நடந்தது. தமிழக ஆளுநர் ரோசய்யா, மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதா மோகன் சிங், தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் அமைச்சர் ராதா மோகன்சிங் பேசிய தாவது:

ஏழை- எளிய மக்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் பயனடையும் வகையில் இந்த புதியதிட்டங்கள் அறிமுகப்படுத்த பட்டுள்ளன. இந்த திட்டங்களால் சமூக பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜ்னா திட்டத்தில், 18 வயது முதல் 70 வயது ஆனவர்கள் ஆண்டுக்கு ரூ. 12 மட்டுமேசெலுத்தி ரூ. 2 லட்சம்வரை காப்பீடு பெறமுடியும். இதேபோல், 18 வயது முதல் 50 வயதானவர்கள் ஆண்டுக்கு ரூ. 330 செலுத்தி பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜ்னா திட்டத்தில் சேரலாம். விபத்து மற்றும் மரணங்களின் போது ரூ. 2 லட்சம் வரை காப்பீடு பெறமுடியும்.

இதுமட்டுமின்றி, 18 வயது முதல் 40 வயதுவரை ஆனவர்கள், அடல் ஓய்வூதிய திட்டத்தின்படி மாதந்தோறும் பணம்செலுத்தினால் 60 வயது நிறைவடைந்த பிறகு மாதந்தோறும் ரூ. ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை உதவித்தொகை பெற முடியும்.

இது எல்லாவற்றுக்கும் வங்கிக்கணக்கு இருந்தால் போதும். இந்த மூன்று திட்டங்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும்.

Leave a Reply