மே மாதம் 2ம் ஞாயிறுக்கிழமை அன்று அன்னையர் தினம்! இந்த ஆண்டு அன்னையர் தினத்திற்கு அடுத்தநாள் 11ம்தேதி திங்கள்கிழமை அதிமுகவின் தலைவி அம்மாவிற்கு 'விடுதலை'.

ஆச்சர்யம், வருத்தம், ஆனந்தம், துக்கம், அதிசயம் என நவரசங்களும் கலந்த 'ரியாக்க்ஷன்ஸ்' 'அம்மாவின்' விடுதலை பெற்றுத் தந்திருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிபதி குன்ஷா தனது தீர்ப்பால்…. 100 கோடி ரூபாய் அபராதம்….. 4 ஆண்டுகள் தண்டனை அறிவித்ததும் அதனால் தமிழகத்திலுள்ள 'ரத்தத்தின் ரத்தங்கள்' தமிழகத்தையே 'ரத்தக்களறி' ஆக்கியதும் நாடறிந்த உண்மை!

இந்த ஆண்டு மே 11ம் தேதி அன்று அதே போன்று ஏதாவது 'அசம்பாவிதம்' நடந்துவிடுமோ மக்கள் அஞ்சி நடுங்கிய போது தப்பா ஏதும் நடக்காமல் அதைவிட பெரிய 'அசம்பாவிதமாக' தீர்ப்பு வெளியாகியிருக்கிறது!

நீதிபதி குமாரசாமி 3 நிமிட தீர்ப்பால் 'ஜெ'க்கும் அவரோடு சேர்ந்த 3 பேருக்கும் விடுதலை….. சொத்து முடக்கமில்லை….. '100 கோடி அபராதம் ரத்து'….. என அரசியல் வானில் புயலையும், திமுகவிற்கு 'மின்னல் ஷாக்கும்' கொடுத்துவிட்டார்.

கருணாநிதியின் கேள்விப்புலம்பல்கள் படிக்க நியாயமானதாகத் தான் தோன்றுகிறது. '158 முடிச்சுகளை யார் எப்போது அவிழ்த்தார்?' குமாரசாமி கேட்ட ஊழல் எதிர்ப்பு, 'ஜெ' எதிர்ப்பு கேள்வியெல்லாம் போலியா? உச்சிநீதிமன்றம் பவானிசிங் நியமனம் '(BAD IN LAW)' என சொன்னதற்கு என்ன அர்த்தம்?' இவையெல்லாம் தீர்ப்பனால் ஒடிந்து போன திமுகவிற்கு மேடைகளில் முழங்க ஆறுதலான வார்த்தையாக இருக்கும்.

'ஜெ' சட்டத்தின் முன் நிரபராதியாக இருக்கலாம்! தர்மத்தின் முன் எப்படி? என்பது மிலியன் டாலர் கேள்வி!

'ஜெ' மீது 4 ஆண்டு தண்டனை தீர்ப்பு வந்த நிமிடம் முதல், பால்குடம் என்ன, காவடி என்ன, அலகுகுத்தல் என்ன? தீமிதிப்பு என்ன? யாகங்கள், ஹோமங்கள், தீர்த்தவாரிகள், மண்சோறு, தங்கத்தேர் என்ன, என்ன என்ன? என தெரியாத பல 'படையல்கள்' தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் நிகழ்த்தப்பட்டன.

காவி வேட்டி கட்டிய அனைத்து சாமியாரும், கோபுரமுள்ள, இல்லாத அனைத்து கோயில்களும், மந்திரம் தெரிந்த, தெரியாத அத்தனை பூசாரிகளும், வாழ்வாங்கு, வாழ்வு பெற்றார்கள், பணமழையில் நனைந்து குளிர் ஜுரம் கண்டார்கள்.

கின்னஸ் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் எத்தனை பால், தேன்குடம், அலகுகுத்தல், தலைக்கு ரூ 500 / 1000 என பெரிய பணபட்டுவாடாக்கள்.

கடவுளை குளிர்விப்பதை விட அம்மா மனதை குளிர்விக்க நடந்த,….. இதுவரை பலருக்கு தெரியாத யhகங்கள் அரங்கேறின.

இத்தனையும் பெற்ற இறைவனயனhர் 'அம்மாவை' காப்பாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள்?

தர்மமா? நீதியா? கடவுள் பலமா? என்ற கேள்விகளில் இன்று வென்றது இந்து கடவுள்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொடுத்த வரம் தான்!

இந்த தீர்ப்பை நியாயமா? அநியாயமா? ஊழலா? நேர்மையா? என நான் விமர்சிக்க தயாரில்லை? ஆனால் எனக்கு ஒரே ஒரு ஆறுதல் தான்!

இந்து கடவுளர்கள் சாத்தான் இல்லை! உண்மையிலேயே கடவுளர் தான். சக்தி உள்ளவர்கள் தான். அதிமுகவினர் நடத்திய வழிபாட்டுக்கு அவரின் 'அம்மாவிற்கு' விடுதலை கொடுத்துவிட்;டார்கள்……. தமிழ்நாட்டு மக்களுக்கு….?

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Tags:

Leave a Reply