சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யபட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா நான்கு வருடம் சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சிறப்புநீதிபதி குமாரசாமி இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கினார். கீழ்கோர்ட் வழங்கிய தண்டனையை ரத்துசெய்ய நீதிபதி குமாரசாமி, குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலைசெய்து உத்தரவிட்டார்.

இதனால், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதைதொடர்ந்து ஜெயலலிதாவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவரகள் வாழ்த்துதெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவலை அ.தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply