எதிர்க் கட்சி உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புக்கு இடையே சர்ச்சைக் குரிய நிலம் கையகப்படுத்துதல் நிலதிருத்த மசோதா மக்களவையில் இன்று மீண்டும் தாக்கல்செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப் படுத்துதல் திருத்த

மசோதா எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட வில்லை நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறாதாதை தொடர்ந்து நிலம் கையகப்படுத்துதல் அவசரசட்டமும் காலாவாதியானது.

எனவே மீண்டும் அவசரசட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மசோதா மீண்டும் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் சவுத்ரி வீரேந்திரசிங் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையே மசோதாவை தாக்கல்செய்தார்.

Leave a Reply