அயோதியாவில் ராமர்கோயில் கட்ட வகைசெய்யும் தீர்மானத்தை தற்போது கொண்டுவர இயலாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

அயோதியாவில் விஷ்வ இந்துபரிஷத் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், பாஜக தற்போது மாநிலங்களவையில் பெரும் பான்மையில்லை என்பதால் ராமர் கோயில் கட்டுவதற்கான சட்டத்தை இயற்ற வகை செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வாய்ப்பில்லை.

மாநிலங்களவையில் பெரும் பான்மை கிடைத்தால், கோயிலை நிறுவ சட்டம் கொண்டு வரப்படுமா என்று கேட்டதற்கு , யூகங்களின் அடிப்படையில் பதில்சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார். முன்னதாக ஆர்.எஸ்.எஸ்.பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோசி , அயோதியாவில் ராமர்கோயில் கட்டுவதற்காக தற்போது எந்த போராட்டத்திலும் ஈடுபட போவதில்லை இந்த விஷயத்தில் அவசரம்காட்டாமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்போம் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply