நிலம் கையகப் படுத்தும் மசோதாவை கொண்டுவந்து அதை நிறைவேற்ற அவசரம் காட்டியதே முந்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் அதைதான் பாஜக.வும் ஆதரிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நிலம் கையப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றிட மத்தியஅரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் பார்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு காங். உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த நிலம் கையக மசோதா விவகாரம் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது;

நான் ஆட்சி பொறுப் பேற்றதும், அனைத்து மாநில முதல்வர்களும் என்னை சந்தித்து நிலமசோதா குறித்து சீர்திருத்தம் செய்யவேண்டும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தனர். அந்தகடிதங்கள் என்னிடம் உள்ளது.அதன் அதனடிப் படையில்தான் நிலம் கையகப்படுத்தம் மசோதா கொண்டு வரப்பட்டது. மேலும் அதன் வரலாற்றை நினைவுகூர்ந்தால், 120 வருடங்களுக்கு பின் இந்தமசோதா கவனத்தில் கொள்ளப்படுகிறது.

மேலும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை முந்தை ஐ.மு., கூட்டணி அரசுதான் கொண்டுவந்து நிறைவேற்றிட அவசரம் காட்டியது. அதனை பா.ஜ. ஆதரித்தது.அது தவறு தான். அதனைத்தான் தற்போது பா.ஜ.வும் ஆதரிக்கிறது. இதில் காங். மனதில் ஏதோகுறைபாடு உள்ளது. அதனை அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும். எனவே இந்தவிவகாரத்தில் காங். கட்சிக்கு மட்டுமல்ல பா.ஜ.வுக்கு தான் மிகுந்த பொறுப்பு உள்ளது.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Leave a Reply