மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. டெல்லியில் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டுவரும் எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டின் பலபகுதிகளிலும் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

இதனை ஏற்று கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மதுரை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு மாவட்டங்களில் மத்தியகுழு ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வுக்குபின்னர் மத்திய அரசிடம் இக்குழு அறிக்கை அளித்தது. இந்த கோரிக்கையை ஏற்று தமிழகத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப் பதற்கான இடங்கள் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின் முடிவில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. மதுரை தோப்பூரில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது தென் மாவட்ட மக்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Leave a Reply