பாகிஸ்தானின் கராச்சியில் ஷியாபிரிவு முஸ்லிம்கள் வந்து கொண்டிருந்த பேருந்துக்குள் புகுந்த தரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் திடீர் என அவர்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 55 பேர் பலியானதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள இரங்கல்செய்தியில் கராச்சியில் நடந்த தாக்குதலுக்கு நான் வருந்துகிறேன் அதே சமையத்தில் இது போன்ற தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

இதில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply