ஐ.எஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொள்வதற்காக இங்கிலாந்திலிருந்து, சிரியாவிற்கு சென்ற 3 பள்ளி சிறுமிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிராதிகளுடன் சேர இங்கிலாந்து தலைநகர் பிரித்தானியாவிலிருந்து ஷமீமா பேகம், அமீரா அபாஸ், கதீஜா சுல்தானா ஆகியோர் பெற்றோருக்கு தெரியாமல் விமானம் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி கிளம்பினர்.

அந்த 3 மாணவிகள் துருக்கி செல்ல விமான நிலையம் சென்றபோது அங்கிருந்த சிசிடிவி கமெராவில் அவர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது.

இங்கிலாந்தில் இருந்து துருக்கி சென்ற மாணவிகள் ஷமீமா, அமீரா, கதீஜா ஆகியோர் அங்கிருந்து சிரியா சென்று ஐ.எஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்துள்ளனர். அந்த 3 பேரும் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தீவிரவாதிகளை திருமணம் செய்த மாணவிகள் மூன்று பேரும் ஈராக்கில் உள்ள மொசுல் நகரில் இருந்து தப்பியோடியுள்ளனர். அவர்கள் மொசுல் நகரை தாண்டவில்லை என்று கூறப்படுகிறது.

மொசுல் நகரில் இருந்து தப்பியோடிய மூன்று மாணவிகளை தீவிரவாதிகள் தேடி வருகிறார்கள். அந்த 3 பேரும் தீவிரவாதம் பிடிக்காமல் தான் தப்பியோடியிருக்க வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply