தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் சிறப்பாக ஆண்டு கொண்டிருக்கும் நரேந்திர மோடி அரசு நம்நாட்டின் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை அறிந்து மீனா குமாரியின் பரிந்துரைகளை நிராகரித்துள்ளது என்பது மகிழ்ச்சிகரமான செய்தி. மோடி அரசு என்றுமே நம்நாட்டு மீனவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிற அரசு என்பதை மீண்டும் உறுதிசெய்துள்ளது.

அது மட்டுமல்ல, ஆழ் கடலில் மீன்பிடிப்பை நம் மீனவர்களுக்கு எப்படி வெற்றி கரமாகப் பயிற்றுவித்து அவர்களை அதில் ஈடுபடுத்தலாம் என்பதை மத்திய அரசு தீவிரமாக சிந்தித்துவருகிறது. அது மட்டுமேயின்றி, மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க பலதிட்டங்களை பரிசீலனை செய்துவருகின்றது.

நாட்டில் நல்லது நடக்கும் போது அதற்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்வது நம் கலாசாரமாக இருக்க வேண்டும். அதன்படி, நம் நாட்டு மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மீனா குமாரியின் அறிக்கையை நிராகரித்த மத்திய அரசுக்கும், மேற்படி அறிக்கையை புறக்கணித்த மத்திய அரசுக்கு வாழ்த்துதெரிவித்த அத்தனை தலைவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply