சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி ஜியானில் உள்ள டெரகோட்டா வாரியர்ஸ் அருங் காட்சியகத்தை சுற்றிப்பார்த்தார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் சொந்த ஊரும், ஷான்சி மாகாணத்தின் தலை நகருமான ஜியான் நகருக்கு சென்றார்.

ஜியான் நகரில் உள்ள உலக புகழ்பெற்ற டெரகோட்டா அருங் காட்சியகத்திற்கு சென்று அதை சுற்றிப் பார்த்தார். அந்த அருங்காட்சியகத்தில் களி மண்ணால் ஆன சுமார் 8 ஆயிரம் வீரர்களின் சிலைகள் இருந்ததை மோடி பார்த்தார்.

வெள்ளை நிற குர்தா அணிந்திருந்த மோடி கூலிங்கிளாஸ் அணிந்து தோளில் ஒரு சால்வையை போட்டிருந்தார். அருங்காட்சியகத்தில் இருந்த டெர கோட்டோ சிலைகள் பற்றி அவருக்கு விளக்கிக்கூறப்பட்டது. அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்த அவர் தனது கருத்துக்களை பார்வையாளர்கள் பதிவேட்டில் எழுதினார். முன்னதாக விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply