பிகார் முதல்வர் பதவிக்கான பாஜக வேட்பாளர் குறித்து கட்சியின் நாடாளுமன்ற குழு முடிவுசெய்யும்'' என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறினார்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது குறித்து பிகார் மாநிலம், மோதி ஹாரியில் செய்தியாளர்களிடம் ஷா நவாஸ் ஹுசைன், வியாழக் கிழமை கூறியதாவது:

பிகார் முதல்வர் பதவிக்கு பாஜக மூத்த தலைவர்களான சுஷில் குமார் மோடி, நந்தகி ஷோர் யாதவ், கட்சியின் மாநில தலைவர் மங்கள் பாண்டே, இந்த மாநிலத்தை சேர்ந்த சில மத்திய அமைச்சர்கள் என இவர்களில் யாராவது ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம். முதல்வர் பதவிவேட்பாளரை முன்கூட்டியே அறிவிப்பதா, வேண்டாமா என்பதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நாடாளுமன்ற குழுதான் முடிவுசெய்யும் என்று ஷாநவாஸ் ஹுசைன் கூறினார்.

Leave a Reply