ஜெயலலிதா தமிழக முதல்வராக விரைவில் பதவியேற்க வேண்டும் , தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பதிலாக பாஜக ஆட்சிக்கு வரும் என உறுதியாக நம்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருண்ணன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், குழந்தைகளை வேலையில் அமர்த்துவதை பாஜக கடுமையாக எதிர்க்கிறது. குழந்தைகளை மற்றபணிகளில் அமர்த்தி கொடுமைப்படுத்திட கூடாது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், எப்போதும் எதிர்ப்போம்.

தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது, குளச்சல் துறைமுகம் கொண்டுவரப்பட்டு இருந்தால் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்திருக்கும். இந்த திட்டம் மூலம் தமிழகம் மிகப் பெரிய பயன் அடைய முடியும்.

குளச்சல் துறை முகத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு தர தமிழக அரசை கேட்டு கொண்டிருப் பதாகவும், அவர்களும் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புவதாகவும் கூறினார். அதுபோல் கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றவேண்டும். அப்படி மாற்றினால் கிழக்குகடற்கரை மாவட்டங்களில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply