ராபர்ட் வத்ராவின் நில ஒப்பந்தம் தொடர்பாக நீதிவிசரணை நடத்த ஹரியனா மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜக அரசு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மரு மகன் ராபர்ட் வத்ரா டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான அரசு நிலங்களை வாங்கினார். இந்த நிலபேரங்களில் பெரியளவில் ஊழல்கள் நடந்து இருப்பதாக குற்றச் சாட்டு எழுந்தது. இந்நிலையில், ராபர்ட் வத்ராவுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் பிற நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ஹரியானா அரசு விசாரணைக்குழு அமைத்துள்ளது.

இந்த விவகாரம் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என ராபர்ட் வத்ரா தெரிவித்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராபர்ட் வத்ராவின் குற்றச்சாட்டை மறுத்தார். இதுபோன்ற விவகாரங்களில் மத்திய அரசு ஒருபோதும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடாது என அவர் கூறினார்.

Leave a Reply