நிலம் கையகப்படுத்தும் சட்டம் நாட்டின்வளச்சிக்கு தடையாகவோ அல்லது விவசாயிகளுக்கு சுமையாகவோ இருப்பதை அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். .

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது.

3 நாள் பயணமாக சீனாசென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின் 2-ம் நாளான நேற்று பெய்ஜிங்கில் உள்ள ஸிங்ஹூவா பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, "எங்கள்வளங்கள் விரைவாகவும் வெளிப்படையாகவும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. நிலம் கையகப் படுத்துதல் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதையோ அல்லது விவசாயிகளுக்கு சுமையாக இருப்பதையோ அனுமதிக்கமாட்டோம்"

வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் தங்கள்வளமான வாழ்க்கையை மீட்கவும், வேளாண் துறையை நாங்கள் சீரமைத்துவருகிறோம்.

பெரியளவிலான சீர் திருத்தங்களை எனது அரசு செய்துவருகிறது. இந்தியாவில் ஏற்பட்டுவரும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். எங்கள்வளர்ச்சி விகிதம் மூலம் இதை நீங்கள் உணரலாம்.

இந்தியாவின் வளர்ச்சிவிகிதம் தற்போது 7.5 சதவீதமாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என சர்வதேச நிபுணர்கள் ஒருமித்தகுரலில் கூறுவது எங்களை ஊக்கப்படுத்துகிறது.

அனைத்து மக்களுக்கும் வீட்டுவசதி, குடிநீர் மற்றும் சுகாதாரவசதிகள் அளிப்பதில் காலவரம்புக்குட்பட்ட இலக்கு களை அரசு நிர்ணயிக்கிறது.

இது மக்களின் வாழ்க்கையை மட்டும் மாற்றியமைக்காது. பொருளாதார செயல்பாடுகளுக்கான புதிய ஆதாரங்களை உருவாக்கும்.

சர்வதேச தரத்திலான உற்பத்தி துறையுடன் இந்தியாவை நவீன பொருளாதாரமாக மாற்ற தனித் திறன் வாய்ந்த தொழிலாளர்களை இந்திய அரசு உருவாக்கி வருகிறது.

ஏழ்மையை அகற்றவும் ஏழைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நவீனபொருளாதார சாதனங்களுடன் கூடிய பாரம்பரிய உத்திகளை நாங்கள் பயன் படுத்துறோம்

காப்பீடு மற்றும் வருங்கால வைப்புநிதி திட்டங்கள் பரம ஏழைக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்தி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply