சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

மோடியின் இந்த பயணத்தின்போது சீனப்பிரதமர் லீ கெகியாங்குடன் செல்பி புகைப் படம் ஒன்றை எடுத்து கொண்டுள்ளார். இதனை பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தற்போதைய இளைஞர்களிடம் அதிகமாக இருக்கும் செல்பிமோகம், இரு நாட்டு தலைவர்களிடமும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

எனினும், மற்றசெல்பிக்கள் சமூக தளங்களில் இடம்பெறலாம். ஆனால், இவ்விரு நாட்டுத் தலைவர்களும் எடுத்துக் கொண்ட செல்பி நிச்சயம் வரலாற்றில் இடம்பெறும் செல்பியாகக்கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Reply