"கடந்த ஓராண்டாக நான் ஒருநாள்கூட விடுப்பு எடுக்கவில்லை. இரவுபகலாக பணியாற்றி வருகிறேன். நான் பணிவிடுப்பு எடுத்துக் கொண்டு எங்காவது சென்றேனா? ஓய்வு எடுக்கிறேனா? நான் எனது வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில்லையா?"

"பலரும் கேட்கின்றனர், மோடி ஏன் இவ்வளவு நாடுகளுக்கு பயணிக்கிறார் என்று, நாம் பணியை குறைவாகச் செய்யும்போது விமர்சனங்கள் எழுவது சகஜமே. தூங்கி கொண்டிருந்தாலும் விமர்சனங்களில் நியாயம் இருக்கும். ஆனால் கடுமையாக பணியாற்றுவதற்காக நான் விமர்சிக்கப்படுகிறேன் என்பது என்னுடைய துரதிர்ஷ்டம்.

கடுமையாக உழைப்பது ஒருகுற்றம் என்றால், நான் அதைச் செய்துகொண்டுதான் இருக்கப் போகிறேன். மக்களுக்காக நான் கடமை யாற்றுவேன்.

காலம் மாறிவருகிறது, உலகம் இப்போது இந்தியாவை வித்தியாசமாக பார்க்கிறது. இது இந்தியகுடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை தரக்கூடியது.

கடந்த தேர்தல் முடிவுகள் வந்தவுடன் 3 உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டேன், ஓய்வில்லாமல் உழைப்பது , கற்றுக் கொள்வது , மோசமான நோக்கத்துடன் தவறுகள் செய்யாமல் இருப்பது என்ற 3 உறுதி மொழிகளை எடுத்துக்கொண்டேன்.

கடந்த ஓராண்டில் நான் ஒரு நாள் கூட ஓய்வு எடுக்கவில்லை. இந்த ஓராண்டில் நான் விதைத்ததை வளர்த்தெடுக்க வேண்டும். நான் இதனை 5வது ஆண்டில் செய்திருந்தால் ஒருவரும் கண்டு கொள்ளப் போவதில்லை. ஆனால் உலகம் எங்களை சீரியசாக எடுத்துக் கொள்ளக்காரணம் நாங்கள் முதல் ஆண்டிலேயே கடுமையாக பணியாற்றி வருகிறோம்.

மேலும், மோசமான நோக்கத்தில் தவறான அடியெடுத்து வைத்தோம் என்று எங்கள்மீது யாரும் குற்றம் சுமத்த வில்லை. எனது நாட்டைக் காயப்படுத்தும் தவறை நான் ஒரு போதும் செய்யப் போவதில்லை.

சிலர் கேட்கிறார்கள் யார் இந்த மோடி, அயல் நாட்டு கொள்கைகள் பற்றி இவருக்கு என்ன தெரியும் என்று. குற்றச் சாட்டுகள் சரிதான், ஆனால் அச்சங்கள் தவறு. இந்திய-சீன உறவுகள் வலுப் பெறுவது இரு நாடுகளுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே பயனளிக்கும்.

எனக்கும் எனது குழுவுக்கும் இங்குகிடைத்த வரவேற்பு இந்திய மக்களுக்கானது."

நரேந்திர மோடி சனிக்கிழமையன்று ஷாங்காய் நகரில் இந்தியர்களிடம் பேசியுது

Tags:

Leave a Reply