பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலமையகத்தில் நடைபெற்றுள்ள இந்தசந்திப்பில், நரேந்திர மோடி அரசு ஓராண்டு நிறைவுசெய்துள்ளது குறித்தும் அமைப்பு ரீதியாகவும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தவார தொடக்கத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மோகன் பகவத்தை சந்தித்து பேசியிருந்த நிலையில், பாரதீய ஜனதா தலைவரின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த இருதலைவர்களின் சந்திப்புக்கு பிறகு எந்த ஒரு அதிகாரப் பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடனான அமித்ஷாவின் சந்திப்பு ஒன்றரை மணிநேரம் நீடித்தது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க அமித்ஷா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

Leave a Reply