பிரதமர் நரேந்திரமோடி மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் அடுத்த கட்டமாக இன்று காலை தென் கொரியா சென்றார். சியோல் விமான நிலையத்தில் தென்கொரிய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அவருக்கு வரவேற்பளித்தார்.

கடந்த 14ம் தேதி இந்தியாவில் இருந்து மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் கிளம்பினார் பிரதமர் மோடி. முதலில் சீனா சென்ற மோடி, பின்னர் அங்கிருந்து மங்கோலியா சென்றார். அதனை தொடர்ந்து மங்கோலியாவில் இருந்து புறப்பட்ட மோடி, இன்று காலை தென் கொரியா சென்றடைந்தார்.

சியோலில் உள்ள தேசிய நினைவிடம் மற்றும் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக தென் கொரியாவில் உள்ள இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்துள்ள ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது. பின்னர் இரு நாட்டுக்கிடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

Leave a Reply