பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தை தூய்மைப் படுத்தும் பணி நடைபெற்றது.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூய்மை பணியை தொடங்கி வைத்து பேசியதாவது;

பிரதமர் மோடி அரசு பதவி ஏற்ற ஓராண்டில் பல்வேறு வளர்ச்சிதிட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டம் மூலம் இந்தியாவில் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதன் மூலம் உலகமக்களின் கையில் இந்திய பொருட்கள் தவழும்வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதே போல் ஏழைமக்களின் வாழ்வுக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறது.

'மேக் இன் இந்தியா' திட்டம் போலவே தூய்மை இந்தியா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த திட்டம் ஒரு நாள் திட்டமாக இல்லாமல் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே தூய்மைப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை ஆர்கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமாவுக்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை.

அங்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுவாரா? என்பது எனக்கு தெரியாது. அங்கு பா.ஜ.க போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாநில பா.ஜனதாவின் தலைமை முடிவு செய்யும்.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடாகும். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.

ஜெயலலிதா விடுதலையானது தொடர்பாக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பல்வேறு சந்தேக ங்களை எழுப்பியுள்ளனர். சிலதலைவர்கள் கற்பனையான வாதங்களை வைத்து மத்திய அரசு மீது பழிபோட்டு பிரச்சினையை திசைதிருப்ப முயல்கின்றனர். அது எடுபடாது. நீதிமன்றங்களின் செயல் பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை. இனியும் தலையிடாது.

அதிமுக.,வைப் பொறுத்த வரை ஜெயலலிதாவே வலிமையான தலைவர். முதல்வர் பதவிக்கான துணிச்சலும், திறமையும் அவருக்கு உள்ளது. அவர் முதல்வரானால் அரசுநிர்வாகம் சிறப்பாக நடைபெறும். வளர்ச்சி திட்டங்கள் வேகம்யேடுக்கும். இப்போது வழக்கிலிருந்தும் அவர் விடுதலையாகியுள்ளார். எனவே, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். இதில் அரசியல்நோக்கம் எதுவும் இல்லை. திமுகவாக இருந்தால் கருணாநிதி முதல்வராக வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பேன்.

பாஜகவைப் பொறுத்த வரை அதிமுக, திமுக இரண்டையும் தோற்கடிக்கவே விரும்புகிறோம். வரும் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க, திமுக.,வுடன் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை. தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம்
50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி ஊழல் ஆட்சியாக அமைந்தது. அதை அகற்றும் பணியை பிரதமர் செய்துள்ளார். அதாவது ஊழலை அகற்றுவதற்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894–ல் கொண்டுவரப்பட்டது. அதில் பல பிரச்சனைகள் உள்ளது. அதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கூறினார்கள்.

எனவேதான் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு சிலதிருத்தங்களுடன் கொண்டுவர உள்ளது. இதை எதிர்த்து ராகுல் காந்தி போராட்டம் நடத்துவது நல்லதல்ல. பெட்ரோல் விலையை 15 முறை குறைத்துள்ளோம். தற்போது சந்தை நிலவரத்துக்கேற்ப உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply