மண்டலவாரியாக சிதறிகிடக்கும் ஆசியநாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். பொது நோக்கத்துக்காக ஒன்றிணைந்து தங்கள் பாரம் பரியம் மற்றும் சக்தியை பகிரிந்துகொள்ள வேண்டும்.

இதன்மூலம் நல்லதொரு உலகம் உருவாகும். செல்வசெழிப்பு மற்றும் வளமை உருவாகும். அதைத்தான் இந்தியா விரும்புகிறது. ஒருநாடு பலமாக இருந்தால்தான் மற்றொறு நாடு பலம் வாய்ந்ததாகமாறும்.

நாம் ஒன்று பட்டால் ஐ.நா. போன்ற சர்வதேச அங்கத்தைக் கூட சீர்திருத்தலாம். ஆசியா ஒன்றுபட வேண்டுமானால், பல்வேறு பிராந்தியங்களாக பிரிந்துகிடப்பதை தவிர்க்க வேண்டும். ஆசிய நாடுகளுக்கு இடையே மோதல்போக்கு நிலவினால், அது ஆசிய கண்டத்துக்கு ஏற்படும் பெரும் பின்னடைவு.

மாறாக நாம் ஒற்றுமையாக இருந்தால் உலகுக்கே ஒரு புதுவடிவம் கிடைக்கும். ஒருநாட்டின் வெற்றி மற்றொரு நாட்டுக்கு வலுசேர்க்கும். இந்தியாவின் வளர்ச்சி ஆசிய நாடுகளின் கனவை நனவாக்கும். எதிர் காலத்தில் இந்தியாவை போன்று அண்டை நாடுகளும் வளர்ச்சி அடையவேண்டும் என விரும்புகிறேன்.

இந்தியா ஆசியாவின் குறுக்குசாலையாக உள்ளது. ஆசிய நாடுகளை ஒன்றிணைக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக கருதுகின்றனர். இந்தியாவின் வளர்ச்சிவிகிதம் தற்போது ஆண்டுக்கு 7.5 சதவீதமான உயர்ந்துள்ளது. எதிர் காலத்தில் அது மேலும் பலமாக வளர்ச்சி அடையும்.

நமது ஆசிய மண்டலத்திலும், சர்வதேசளவிலும் இந்தியா புதியநம்பிக்கை நடசத்திரமாக திகழ்வதாக உலக அளவில் ஒரேகுரலில் பேசப்படுகிறது.

அடுத்த 40 ஆண்டுகளில் ஆசியாவில் 300 கோடி மக்கள் தங்களது வளமான வாழ்க் கையை பெறுவார்கள் என நம்புகிறேன். கட்டமைப்பு மற்றும் ஒற்றுமமையின் மூலம் நமதுநாடுகள் இணைந்து செயல்படவேணடும்.

அதன் மூலம் ஆசியாவில் அமைதி ,ஸ்திரதன்மை உள்ளிட்ட அனைத்தும் ஏற்படும். தீவிரவாதம், நோய்கள், இயற்கை பேரழிவுகள் உள்ளிட்டவைகளை சமாளிக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து போராடுவேம்.''

தென்கொரியாவில் சியோலில் நடைபெற்ற ஆசிய நாடுகளின் தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசிய

Leave a Reply