சீன அரசின் "குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியிடபட்ட கட்டுரையில் தெரிவிக்க பட்டுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12 மாதங்களில் வாஷிங்டனுக்கு (அமெரிக்கா) மட்டுமன்றி, டோக்கியோ, ஒட்டாவா (ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் தலை நகரங்கள்), ஜெர்மனியின் பெர்லின், சீனத்தலை நகர் பெய்ஜிங் ஆகிய நகரங்களில் சுற்றுப் பயணம் செய்தார். இதேபோல், சீனா, அமெரிக்கா, ரஷியா ஆகிய நாட்டுத் தலைவர்களையும் தனது நாட்டில் மோடி சந்தித்துப் பேசியுள்ளார்.

புவியியல் ரீதியாக முக்கிய பகுதியில் அமைந்திருப்பதால், இந்தியாவுக்கு சாதகமான ராஜீயசூழல் நிலவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அத்துடன், உலகின் பல்வேறு நாடுகளும், இந்தியாவுடன் நல்லுறவை தொடரவே விரும்புகின்றன. கடந்த ஓராண்டில் பல்வேறு நாடுகளுக்கு மோடி பயணம்மேற்கொண்டார். அதில், இந்தியாவுக்கு சாதகமாக சில ராஜீய முடிவுகளும் கிடைத்தன.

அதேசமயம், இந்தியாவில் அன்னியநேரடி முதலீட்டுக்கான சூழலை மோடி மேம்படுத்தினால் மட்டுமே அவரது பயணங்களுக்கும், வாக்குறுதிகளுக்கும் நல்லபயன்கள் கிடைக்கும்.

2008ம் ஆண்டு உலக பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்ட போது, இந்தியாவும் தனது வளர்ச்சியில் பாதிக்கப்பட்டது. வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு, இந்திய அரசிடம் போதிய நிதி இல்லை. அதையடுத்தே, பொருளாதாரவளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அறிமுகப் படுத்தப்பட்டன என கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply