கங்கை மாசுபடுவதை தடுக்கும் வகையில், குற்றவியல் நடவடிக்கைகளை உள்ளடக்கிய புதியசட்டத்துக்கான மசோதாவை உருவாக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தமசோதா தொடர்பான நடவடிக்கைகளை மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. "கங்கையை தூய்மைப்படுத்த வகைசெய்யும் 4 மசோதா க்களை பிற அமைச்சகங்களிடம் இருந்து பெற்று; அவற்றை ஒன்றிணைத்து இறுதிமசோதாவைத் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன' .

"புதிய மசோதாவில் இடம் பெறும் விதிகள், கங்கை நதி மாசுபடுவதை தடுப்பதுடன், நிலையான தூய்மையை ஏற்படுத்துவதாகவும் அமையும்'.

இதற்கிடையில், கங்கையை தூய்மைப் படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்படாத கழிவுகள் கங்கைநதியில் நேரடியாக கலக்க விடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply