பிரதமர் நரேந்திரமோடி தனது மூத்த அமைச்சரவை சகாக்களை புதன் கிழமை சந்தித்தார். அப்போது தனது அரசின் ஓராண்டு நிறைவுநாள் நிகழ்ச்சிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

சீனா, மங்கோலியா, தென் கொரியா ஆகிய 3 நாடுகளில் பிரதமர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு நாடுதிரும்பினார். இந்நிலையில் மூத்த அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, நிதின்கட்கரி ஆகியோரிடம் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஓராண்டு நிறைவுவிழாவை வரும் 26-ம் தேதி கொண்டாடுவது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விழா தொடர்பாக பாஜக தலைவர் அமித்ஷாவும் பிரதமரை சந்தித்தார்.

கடந்த ஓராண்டில் மத்தியஅரசு மேற்கொண்ட பணிகள், குறிப்பாக சமூக நலன்சார்ந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்குமாறு அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply