பிரதமர் மோடியையும், அவரது ஆட்சியையும், திட்டங்களையும் பாராட்டியுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சித் தலைவர் சரத்குமார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய பாஜக அரசு திட்டங்கள் நல்லவரவேற்பை பெற்றுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ண தூதுவராக நாடுமுழுவதும் பயணம்செய்து வருவதால் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவில் வணிகம்செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டுவருகின்றன. உலக நாடுகள் இந்தியாவில் வணிகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நரேந்திர மோடி ஏற்படுத்தி வருகிறார்.

5-ஆவது முறையாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்பது ஆட்சிக்கு நல்லவலிமையை ஏற்படுத்தும். மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மேம்படும். அவருக்கு அ.இ.ச.மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply