பாஜகவின் மாநில இணை அமைப்புப் பொதுச்செயலாளராக கேசவ விநாயகம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாக்பூரில் கடந்த மார்ச் 15-ம் தேதி நடைபெற்ற ஆர்எஸ்எஸ். அகில இந்திய பொதுக் குழு கூட்டத்தில் அந்த அமைப்பின் தென்தமிழக அமைப்பாளர் கேசவவிநாயகம் பாஜகவுக்கும், வடதமிழக அமைப்பாளர் க.பக்தவத்சலம் இந்து முன்னணிக்கும் மாற்றப் பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்தமாதம் பெங்களூருவில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுகூட்டத்தில் பாஜக மாநில இணை அமைப்பு பொதுச் செயலாளராக கேசவ விநாயகம் அறிவிக்கப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் கோடைகால பயிற்சிமுகாம்கள் நடைபெற்று வந்ததால் கடந்த 20-ம் தேதிதான் அவர் அந்த அமைப்பிலிருந்து விடுவிக்கப் பட்டார். இதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முறைப்படி அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Leave a Reply