தமிழக முதல்வராக ஜெ., இன்று காலை பொறுப் பேற்றார். கவர்னர் ரேசாசையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜெ., மட்டும் தனியாக பதவியேற்றுகொண்டார். நேரம் கருதி 14, பதினான்காக இரண்டு அணியாக மொத்தமாக உறுதிமொழி எடுத்துகொண்டனர். .

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக., தொண்டர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் குவிந்துள்ளனர். கூட்டம் அதிகம்வந்ததால் இப்பகுதி வழியாகசெல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

சென்னை பல்கலை., நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா நடக்கிறது. ஜெ., வை வரவேற்கும் வகையில் சென்னை முக்கிய சாலைகள் முழுவதும் மெகா பிளக்ஸ்போர்டுகள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். காலை 10 .30 மணியளவில் ஜெ., போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார்.

பதவியேற்பு நிகழ்ச்சியை 30 நிமிடத்தில் முடிக்கவேண்டும் என்பதால், அமைச்சர்கள் 14 பேராக கூட்டாக உறுதிமொழி எடுத்தனர். அனைவரும் ஜன, கன மன என பாடியது போல் ஒட்டு மொத்தமாக உறுதிமொழி எடுத்தனர். இன்னாராகிய நான் என்று மட்டும் அனைவரும் பெயரை உச்சரித்து பின்னர் உறுதிமொழியை மொத்தமாக படித்தனர், இது போன்று எவ்வித பதவியேற்பிலும் நடந்தது கிடையாது.

Tags:


Leave a Reply