பிரதான் மந்திரி சுரக்ஸா பீமா யோஜனா : இது குறைந்த விலையில் விபத்து காப்பீடுக்கான திட்டம் .மாதம் ஒரு ரூபாய்.(ஆண்டிற்கு வெறும் 12 ரூபாய்) மூலம் இரண்டு லட்சத்திற்கான விபத்து காப்பீடு .இந்த திட்டத்தில் 5.77 கோடி மக்கள் முதல் 9 நாளில் இணைந்து உள்ளனர்

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா :

ஆண்டிற்கு வெறும் 330 செலுத்தி 2 லட்ச ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு திட்டம் .இந்த திட்டத்தில் 1.74 கோடி மக்கள் முதல் 18 நாளில் இணைந்து உள்ளனர்

அட்டல் ஜி ஓய்வூதிய திட்டம் :

பென்சன் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் சேரலாம். இவர்கள் மாதந்தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை முதலீடு செய்ய வேண்டும்.ஆண்டு தோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை இந்த தொகையை செலுத்தி வந்தால், அவர்கள் 60 வயதில் இருந்து மாதந்தோறும் ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை பென்சன் பெறலாம்.

மேலே உள்ள 3 திட்டங்களில் இணைய இந்த லிங்கை பயன்படுத்துங்கள்
http://jansuraksha.gov.in/forms.aspx

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா :

கிட்ட தட்ட வங்கிதொடர்ப்பு இல்லாத 15 கோடி மக்களுக்கு குறைந்தபட்ச வைப்புத்தொகை இல்லாத வங்கி கணக்கு ஆரம்பித்து அத்துடன் 5000 கடன் மற்றும் அதனை திருப்பி செலுத்தினால் 15000 ரூபாய் வரை வட்டியில்லா கடனுதவி மற்றும் ஒரு லட்ச ரூபாய்க்கான விபத்து காப்பீடு மற்றும் முப்பதாதிரம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு திட்டம் .வங்கிகளில் கடன் வழங்கபடுவதன் மூலம் ஏழை மக்கள் அதிக வட்டி வசூலிக்கும் இடங்களில் கடன் பெற்று துயரப்படுவது தடுக்கபட்டு உள்ளது

சமையல் எரிவாயு மானியதிற்கான பஹால் திட்டம் :

சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகையை வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் அரசே நேரடியாகச் செலுத்தும் "பஹால்' திட்டம் மூலம் நாடு முழுவதும் 12.6 கோடி மக்கள் பயன் அடைந்து உள்ளனர்.இந்த திட்டம் மூலம் சட்ட விரோதமாக புழக்கத்தில் உள்ள சமையல் எரிவாயுகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா :

சிறு மற்றும் குறுந்தொழில் தொடங்க விரும்பும் மக்கள் லோன் வாங்க அன்றாடம் வங்கிகளிடம் சிரமப்படுவதால் அவர்களுக்கு தனியே முத்ரா வங்கி தொடங்கப்பட்டுள்ளது .இதன் மூலம் தொழில் தொடங்க விரும்புபவர்கள் சிசு என்ற திட்டம் மூலம் ஐம்பதாயிரம் வரையிலும் ,கிஷோர் என்ற திட்டம் மூலம் ஐம்பதாயிரம் முதல் ஐந்து லட்சம் வரையிலும் ,தருண் என்ற திட்டம் மூலம் பத்து லட்சம் வரைக்கும் லோன் பெறலாம் .இந்தத்திட்டத்தில் ஒட்டு மொத்தமாக 5.77 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்

செல்வமகள் சேமிப்பு திட்டம் :

இதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு வங்கிகணக்கு ஆரம்பித்து பெற்றோர்கள் பணத்தை சேமிக்கலாம். அதிகபட்சமாக 9.1% வட்டி தரப்படும்.

டிஜிட்டல் இந்தியா :

இதன் மூலம் இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் கேபிள் வசதி ,பிராட்பாண்ட் இணையதள வசதி, எலக்ட்ரானிக் உற்பத்தி அதாவுது மைக்ரோ ஏ.டி.எம் மற்றும் மொபைல் உற்பத்தி ,தகவல் தொழில்நுட்ப வளர்ர்ச்சி,நாட்டில் உள்ள தொலைபேசி வசதி இல்லாத 44000 கிராமங்களுக்கும் தொலைதொடர்புக்குள் கொண்டு வரும் திட்டம் ,பொது இணையதள பயன்பாடு (PUBLIC INTERNET ACCESS),அனைத்து பல்கலைகலைகழகங்களிலும் வைபை திட்டம் மூலம் அனைத்து பாட புத்தகங்களையும் ஈ.புக் குகளாக மாற்றும் திட்டம் ,ஈ-கவர்னன்ஸ் ,ஈ-கிராண்டி ஆகிய திட்டங்களை எல்லாம் செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது

கிளீன் இந்தியா :

அக்டோபர் 2 ,2019 குள் தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் மோடியால் தொடங்கப்பட்டது .இதன் படி நாடு முழுவதும் கோடிகணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது .கட்டப்பட்டு வருகிறது .பொது இடங்களை சுத்தமாக வைத்துஇருப்பது ,இயற்கை உபாதைகளை பொது இடங்களில் கழிப்பதை தடுப்பது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கம் .பொதுமக்கள் .தொண்டு நிறுவனங்கள்(இவர்களுக்கு சிறிய அளவில் வரிசலுகை வழங்கப்பட்டு இருக்கிறது) இந்த திட்டத்தின் மூலம் தெருக்களை தூய்மை செய்து வருகின்றனர் .

விவசாயிகளுக்கான திட்டம்

பயிர் சேதமைடைந்த விவசாயிகளுக்கு 506 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது சமீபத்தில்.விவசாயிகளுக்கு மிகவும் பயன்படும் சாயில் ஹெல்த் கார்டு வழங்கப்பட்டுள்ளது .50% பயிர் சேதமடைந்து இருந்தால் தான் இழப்பீடு என்ற நிலையை மாற்றி 33% பயிர் சதமடைந்த் இருந்தாலே இழப்பீடு என்ற நிலையை கொண்டு வந்து உள்ளார் மோடி

சுற்றுலா வளர்ச்சி

இந்தியாவில் சுற்றுலா துறை 1215% வளர்ந்து உள்ளது .2014 ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தவர்கள் எண்ணிக்கை 1903.இன்று 25023.இத்தகைய வளர்ச்சிக்கு மோடியின் "visa on arrival" திட்டமே காரணம்

மேக் இன் இந்தியா

இந்த திட்டத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள்.தொழிற்ச்சாலைகள் இந்தியாவில் தொழில் தொடங்க சில கடினமான வழிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது .இந்த திட்டத்தின் படி தற்போது பல நிறுவங்கள் தொழில் தொடங்க ஆரம்பித்து உள்ளனர்.இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்பை பேருக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது

Leave a Reply