தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா ஐந்தாவது முறையாக 23.5.2015 அன்று பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி பிரதமர் அலுவலக டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியினை தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தின் விபரம்வருமாறு:

"தமிழக முதல்வராக நான் 5வது முறையாக பதவியேற்றதற்கு உங்கள் வாழ்த்துக்களுக்கும், நல்லாசிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன், உங்களுக்கான எனது வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளார் ஜெயலலிதா. இதே போல் நிதியமைச்சர் அருண்ஜேட்லி வாழ்த்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசி மூலம் வாழ்த்து கூற, நன்றி தெரிவித்துக் கொண்டார் ஜெயலலிதா.

Leave a Reply